பாலியல் குற்றவாளியுடன் நட்பு வைத்த பில்கேட்ஸ் - வெளியான அதிர்ச்சி தகவல்

Bill Gates
By Petchi Avudaiappan Aug 06, 2021 05:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

 பில் கேட்ஸ்- மெலிண்டா தம்பதியின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில் முதல்முறையாக அவர் வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இணைந்து தொண்டு அறக்கட்டளையை நிறுவி பல்வேறு நாடுகளுக்கு உதவி வருகிறார். இந்த தம்பதியினர் கடந்த மே 3 ஆம் தேதி விவாகரத்து செய்ய இருப்பதாகவும், தொண்டு அறக்கட்டளையில் இருவரும் தொடர்ந்து இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அவர்களுக்கு நேற்று முன்தினம் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் சட்டப்படி விவாகரத்து வழங்கியது. இதனிடையே இந்த விவாகரத்து பிரச்சனைக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அவற்றில் ஒன்று பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் நட்பு வைத்தது ஆகும்.

பாலியல் குற்றவாளியுடன் நட்பு வைத்த பில்கேட்ஸ் - வெளியான அதிர்ச்சி தகவல் | Bill Gates Says Epstein Relationship Was A Mistake

ஜெப்ரி எப்ஸ்டீனை பில் கேட்ஸ் அடிக்கடி சந்தித்து வந்ததாக மெலிண்டா கருதியதாகவும், ஆனால் சமூக சேவைக்காக மட்டுமே ஜெப்ரி எப்ஸ்டீனை பில் கேட்ஸ் சந்தித்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பில்கேட்ஸ், தான் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நட்பு வைத்திருந்தது மிகப்பெரிய தவறு என்றும், அவருக்கு இருந்த தொடர்புகள் மூலம் தொண்டு நிறுவனத்துக்கு நிதி கிடைக்கும் என்று நம்பி அவரை சந்தித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அது நிறைவேறாது என்று தெரியவந்த போது ஜெப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த நட்பு முடிவுக்கு வந்தது.

ஆனால் அவருடன் நேரத்தை செலவழித்தது மிகப்பெரிய தவறாக அமைந்துவிட்டது. நான் தவறு செய்துவிட்டேன். மெலிண்டாவுடன் விவாகரத்து ஆனது நிச்சயமாக ஒரு சோகமான மைல்கல் என்றும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.