69 வயதில் காதலி குறித்து மனம் திறந்த பில் கேட்ஸ் - பவுலா ஹார்ட் என்ன செய்கிறார்?
பில் கேட்ஸ், பவுலா ஹர்டுடனான தனது உறவு பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்தார். இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், 27 வருட திருமண வாழ்வில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
அதன்பின், பவுலா ஹார்ட் என்பவருடன் பல நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். பாரிஸ் ஒலிம்பிக், ஆனந்த் அம்பானியின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துக்கொண்டனர்.
பவுலா ஹார்ட்
இந்நிலையில், பவுலா ஹார்ட்-ஐ தற்போது காதலித்து வரும் பில் கேட்ஸ் அவர் குறித்து பேட்டி ஒன்றில் மெளனம் கலைத்துள்ளார். அதில், ”தனக்கு பவுலா ஹார்ட் கிடைத்தது அதிர்ஷ்டம். ஒலிம்பிக்கிற்கு செல்வது மற்றும் பல சிறந்த விஷயங்களைச் செய்வது என இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பவுலா ஹார்ட் பிரபல மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) தலைமை செயல் அதிகாரி மார்க் ஹார்டின் மனைவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இருவரும் திருமணம் செய்து 30 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மார்க் ஹார்ட் காலமானார். இதனையடுத்து 2022 முதல் பில் கேட்ஸுடன் பவுலா பழகி வந்தார். 2023ல் தங்களின் உறவு குறித்து உறுதிப்படுத்தினர்.