ஒரு கோடி கொரோனா தடுப்பூசி .. இந்தியா பெரிய மைல்கல்லை கடந்துவிட்டது - பில் கேட்ஸ் வாழ்த்து

india Bill Gates 10 million vaccine
By Irumporai Aug 28, 2021 10:30 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை பாராட்டியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இந்தியா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை கடந்துவிட்டது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 61 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50% மக்களுக்கு முதல்டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோர் சுகாதார ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர்  பதிவில் கொரோனா  தொற்று தொடர்பாக ஆகஸ்ட் 28 அன்று இந்தியா நல்ல செய்தியை பதிவு செய்துள்ளது.

ஒரு நாளில் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை செலுத்தியதன் இந்தியா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை கடந்துவிட்டதாக  அவர் கூறியுள்ளார்