பில் கேட்ஸுடன் டேட்டிங் செய்யும் பிரபல சாப்ட்வேர் நிறுவன முதலாளியின் மனைவி - யார் அவர்..? வெளியான தகவல்

Bill Gates Viral Photos Businessman
By Nandhini Feb 09, 2023 01:27 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பில் கேட்ஸுடன் டேட்டிங் செய்யும் பிரபல சாப்ட்வேர் நிறுவன முதலாளியின் மனைவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பில் கேட்ஸுடன் டேட்டிங் செய்யும் பெண்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சில காலமாக ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வருகிறார். அந்தப் பெண் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அப்பெண் பவுலா ஹர்ட்.

இது தொடர்பாக அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட பீப்புள் மேகசீன் என்ற செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

ஆரக்கிள் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் மார்க் ஹர்த்.இவர் ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனத்தின் முன்னாள் முதலாளியாகவும் இருந்துள்ளார்.

இவருடைய மனைவிதான் பவுலா ஹர்த். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு மார்க் ஹர்த் உயிரிழந்துவிட்டார். தற்போது சில காலமாக பவுலாவுடன், பில் கேட்ஸ் டேட்டிங்கில் இருந்து வருகிறார்.

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதியில் பில் கேட்ஸ் மற்றும் பவுலா அடுத்தடுத்து அமர்ந்திருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த டேட்டிங் செய்தியானது, பில் கேட்ஸ் தனது முன்னாள் மனைவியான மெலிண்டா பிரெஞ்சு கேட்சை விவாகரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

bill-gates-has-found-love-again-dating-paula-hurd