சாலையில் ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ்... - வைரலாகும் வீடியோ... - வாயடைத்த நெட்டிசன்கள்...!
மஹேந்திரா நிறுவனத்தின் எலெக்ரிக் ஆட்டோ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஓட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா. இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார். தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர் ஆனந்த் மகேந்திரா. இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ்
இந்நிலையில், ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர், மஹேந்திரா நிறுவனத்தின் எலெக்ரிக் ஆட்டோ ஓட்டினார். உங்களுக்கு நேரம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி பில் கேட்ஸ். இப்போது உங்கள் அடுத்த பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் உங்களுக்கு இடையே 3-சக்கர வாகன ஈவி இழுவை பந்தயம் இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பில்கேட்ஸ் பதிவிடுகையில், புதுமைக்கான இந்தியாவின் ஆர்வம் வியக்க வைப்பதில்லை. நான் மின்சார ரிக்ஷாவை ஓட்டினேன், 131 கிமீ (சுமார் 81 மைல்கள்) வரை பயணிக்கும் மற்றும் 4 பேர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் போக்குவரத்துத் துறையில் கார்பனைசேஷன் செய்வதில் பங்களிப்பதைக் கண்டு அதன் உத்வேகம் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியம் அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
“Chalti ka Naam Bill Gates ki Gaadi” So glad you found the time to check out the Treo @BillGates Now on your next trip’s agenda should be a 3-wheeler EV drag race between you, @sachin_rt and me… pic.twitter.com/v0jNikYyQg
— anand mahindra (@anandmahindra) March 6, 2023