வைரலான பிகினி போட்டோ - எதுக்கு தொழிலையும், அரசியல் வாழ்க்கையையும் முடிச்சு போடுறீங்க... - கடுப்பான காங். வேட்பாளர்
தற்போது சமூக வலைத்தளங்களில் தனது பிகினி படங்கள் வெளியானதை தொடர்ந்து, ஊடக துறையில் நான் செய்து வரும் எனது தொழிலை, எனது அரசியல் வாழ்க்கையுடன் இணைக்க வேண்டாம் என்று உ.பி. காங்கிரஸ் வேட்பாளர் அர்ச்சனா கவுதம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 125 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்த பட்டியலில், மீரட்டின் ஹஸ்தினாபூர் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அர்ச்சனா கௌதம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் மிஸ் பிகினி 2018, மிஸ் உத்தர பிரதேசம் 2014 மற்றும் மிஸ் காஸ்மோ வேர்ல்ட் 2018 ஆகிய பட்டங்களை வென்றிருக்கிறார்.
அர்ச்சான கௌதம் பெற்ற பட்டங்களே தற்போது அவரது அரசியல் வாழ்க்கைக்கு வேட்டு வைத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் அர்ச்சனா கவுதம் பிகினி அணிந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா கவுதம், எனது தொழிலையும், அரசியல் வாழ்க்கையையும் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அர்ச்சனா கவுதம் இது தொடர்பாக பேசியதாவது -
நான் மிஸ் பிகினி 2018ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினேன். நான் மிஸ் உத்தர பிரதேசம் 2014, மிஸ் காஸ்மோ வேர்ல்ட் 2018 ஆக இருந்தேன். ஊடக துறையில் நான் செய்து வரும் எனது தொழிலை, எனது அரசியல் வாழ்க்கையுடன் இணைக்க வேண்டாம். ஹஸ்தினாபூர் ஒரு சுற்றுலா தளமாகும். இங்கு ஏராளமான பழமையான கோயில்கள் இருக்கின்றன.
ஆனால் இணைப்பு (போக்குவரத்து வசதி) பிரச்சினையால் மக்கள் இங்கு வர முடியவில்லை. எம்.எல்.ஏ.. ஆன பிறகு, பஸ் நிலையம், ரயில் நிலையம் கட்டுவதுதான் எனது முதல் பணி. சுற்றுலா வளர்ச்சியடைந்தால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து, மக்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.