கொடூர கொலைகளை அரங்கேற்றி வந்த 'பிகினி கில்லர் சார்லஸ் சோப்ராஜ்' விடுதலை!
கொடூர கொலைகளை அரங்கேற்றி வந்த பிகினி கில்லர் என்று அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
சொகுசு வாழ்க்கை
இண்டர்நேஷனல் போலீசாரின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் தான் இந்த த்ரில் கொலைக்காரர் சார்லஸ் சோப்ராஜ்.
வியட்நாமில் கடந்த 1944 ஆம் ஆண்டு பிறந்தவன் தான் சார்லஸ் சோப்ராஜ் இவனுக்கு தற்போது 78 வயதாகிறது. இவரது தந்தை இந்தியாவையும், தாய் வியட்நாம் நாட்டையும் சேர்ந்தவர்கள்.
இந்த தம்பதியின் மகன் தான் சார்லஸ் சோப்ராஜ் சிறு வயதில் பிரான்ஸ் சென்ற அவன் அந்நாட்டின் குடியுரிமையை பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
அங்கு திருட்டு, மோசடி செய்து பணத்தை சாம்பாதிக்க தொடங்கியுள்ளார். அதன் மூலம் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார்.
சுற்றுலா பயணிகளை டார்கெட் செய்து கொடூர கொலை
அதன் பின் 1970ம் ஆண்டுகளில் சார்லஸ் சோப்ராஜ் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணித்துள்ளார். அப்போது தான் கொடூரன் என்ற முகத்தை வெளிகாட்டிய அவர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கொலை செய்து வந்துள்ளார்.
தாய்லாந்திற்கு சுற்றுலா வந்த பெண் பிகினி ஆடையில் இருந்த போது அந்த பெண்ணை சார்லஸ் சோப்ராஜ் கொலை செய்துள்ளார்.
இதை தொடர்ந்து அவரை பிகினி கில்லர் என அழைக்கப்பட்டார். பின்னர் சுற்றுலா பயணிகளை தொடர்ந்து குறிவைத்து வந்து அவர்களை விஷம் கொடுத்தும், பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்து வந்தார்.
தொடர் கொலைகளால் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சார்லஜ் சோப்ராஜை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
சிறை தண்டனை - தப்பியோட்டம்
இவர் இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், நேபாளம், உள்பட பல நாடுகளில் 30க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வரை இவர் 12 கொலைகள் செய்ததற்கான சாட்சிகள் மட்டுமே உள்ளது. இவ்வாறு கொடூரமான கொலைக்காரராக வலம் வந்து போலீசார் கண்களில் மண்ணை துாவி ஆட்டம் காட்டி வந்த நிலையில் போலீசாரிடம் வசமாக சிக்கனார்.
பின்னர் அவர் இந்தியாவில் உள்ள சிறையில் 1976 முதல் 1997 வரை அடைக்கப்படார். 1976ல் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
1986 ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பித்து கோவாவில் சுற்றி திரிந்தார். அங்கு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடல்நலம் பாதிப்பு - விடுதலை
இந்தியாவில் அவருக்கு சிறை தண்டனை முடிவடைந்த நிலையில், நேபாள நாட்டில் நடந்த கொலைக்காக கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு முதல் நேபாள சிறையில் இருந்து வரும் அவருக்கு இதய பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நலத்தை கருத்தில் கொண்ட நேபாள நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் சார்லஸ் சோப்ராஜ் விடுதலையாக உள்ளார். சிறையில் இருந்து விடுதலையாக உள்ள அவருக்கு வயது 78. சிறையில் இருந்து விடுதலையான 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.