பைக்கை திருடிய அசதியில் படுத்து உறங்கிய திருடர்கள் - தூக்கத்தை தெளிய வைத்த போலீஸ்!
பைக்கை திருடி அசதியில் காட்டு பகுதியில் படுத்து உறங்கிய திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
பைக் திருட்டு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேட்டுப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மூன்று இளைஞர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் பக்கத்தில் இரு சக்கர வாகனங்களும் நிருத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதிகாலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவர்களை பார்த்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கைது
சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் முன்று இளைஞர்களையும் பிடித்து விசாரணை செய்தபோது வேதாரண்யம் பகுதியில் பல்சர் பைக்குக்களை திருடிவிட்டு அங்கு வந்து தூங்கியது கண்டுபிடிக்கப் பட்டது.
இதனையடுத்து 5 பல்சர் பக்குகளையும் கைப்பற்றிய போலீசார் சாந்தகுமார், பாலமுரளி,வினோத்,அறிவழகன் மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.