பைக் ரேஸில் கைதான இளைஞர் - 1 மாதம் ‘வார்டு பாயாக’ வேலை செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

order Work high-court உயர்நீதிமன்றம் bike-race 1-month ward-boy பைக்ரேஸ் இளைஞர்கைது வார்டுபாயாக
By Nandhini Mar 31, 2022 11:26 AM GMT
Report

 சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருவோரை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக சென்னையில் முக்கிய சாலைகளான சென்னை மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இரவு நேரங்களில், பைக் சாகச பந்தயத்தில் இளைஞர்களை ஈடுபடுவது போலீசாருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக வாகன தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 18ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை உரசி அந்த இளைஞர் அதிவேகமாக பைக்கை ஓட்டிச்சென்றபோது, அப்பெண் தடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்பட்டது.

கடந்த மார்ச் 21ம் தேதி கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் பைக் ரேஸில் ஈடுபட்டபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைதான பிரவீனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ஒரு மாதம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உதவியாளராக பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மாதம் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், உதவியாளராக பணியாற்றும் அனுபவம் குறித்து மருத்துவமனை முதல்வரிடம் தினமும் இளைஞர் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

பைக் ரேஸில் கைதான இளைஞர் - 1 மாதம் ‘வார்டு பாயாக’ வேலை செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு | Bike Race 1 Month Ward Boy Work Order High Court