தினமும் குவாட்டர் இலவசம்..பைக் இலவசம் - வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்
ஹரியானாவில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வாக்குறுதிகள் தான் தற்போது பேசுப் பொருளாக மாறியிருக்கிறது.
வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்
ஹரியானா மாநிலம் சிர்சாத் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் லத்வால் என்ற வேட்பாளர் தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கும் வாக்காளர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்துள்ளார்.
பொதுவாக சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்று வந்துவிட்டாலே வேட்பாளர்களின் வாக்குறுதிகளுக்கு பஞ்சமிருக்காது.

அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லத்வால் தனக்கு வாக்களித்தார் இருசக்கர வாகனம் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் கிராமத்தில் 3 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.என்று வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளார்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளாக இருந்தாலும் கூட தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது இந்த போஸ்டர்