ஆந்திராவில் வெடித்து சிதறிய புல்லட் பைக்..தெறித்து ஓடிய மக்கள்
ஆந்திராவில் புதிய புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்த நிலையில் அது வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் மண்டலம் கசாபுரத்தில் நெத்தி கண்டி ஆஞ்சநேயர் சுவாமி ஆலயம் ஒன்று உள்ளது. இங்கு புதிதாக வாங்கப்பட்ட புல்லட் வாகனம் ஒன்றிற்கு பூஜை நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் தீப்பற்றியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆலயத்திற்கு எதிரே உள்ள சாலையில் வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்க முயன்ற போது பைக் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் வாகனம் முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் தலைதெறிக்க ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஏற்கனவே கடந்த சில நாட்களாக மின் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரியும் சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய நிலையில் தற்போது புது புல்லட் பைக் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.