தான் வாங்கிய பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர் - நடந்தது என்ன? பரபரப்பு சம்பவம்
ஆம்பூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ப்ருத்விராஜ். இவர் பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 1 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தி பைக் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதல் பைக்கை பதிவு செய்யாமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.
இன்று ஆம்பூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு பைக்கை பதிவு செய்ய கொண்டு சென்றபோது, அலுவலர்கள் குடியாத்தம் பகுதிக்கு சென்று உங்களுடைய பைக்கை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பைக் உரிமையாளர் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இது குறித்து அந்த நபர் கூறுகையில், பைக் நிறுவனம் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. என் வண்டியை பதிவு செய்து தருமாறு கடந்த 4 மாதங்களாக கூறிக்கொண்டு வந்தேன். இங்கே போ... அங்கே போ... என்று என்னை அலைக்கழித்தே வந்தனர். ஆம்பூரிலேயே பதிவு செய்து தருமாறு கேட்டேன். குடியாத்தத்திற்கு போக சொன்னார்கள். குடியாத்தம் போனேன். மீண்டும் என்னை அலைக்கழித்தார்கள். பாதி வழிலேயே என் வண்டி நின்றுவிட்டதால் எனக்கு கோபம், கோபமாக வந்தது. இதனால் என் வண்டியை நான் தீயிட்டு கொளுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார்.