தேசிய கொடியை கையில் பிடித்து போராடிய இளைஞர்... - கொடூரமாக தாக்கிய போலீசார் - அதிர்ச்சி வீடியோ வைரல்

Viral Video Bihar
By Nandhini Aug 23, 2022 07:11 AM GMT
Report

பாட்னாவில் தேசிய கொடியை கையில் பிடித்து போராடிய இளைஞரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

இளைஞர் மீது போலீசார் தாக்குதல் 

பீகாரில் உள்ள பாட்னாவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் பணியாணை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.

இதில், தேசியகொடியோடு போராடிய இளைஞர் மீது போலீசார் கொடூரமாக தாக்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.    

viral video