நடனமாட மறுத்த 10 வயது சிறுமி...பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரர்கள்... - அதிர்ச்சி சம்பவம்..!
பீகாரில் நடனமாட மறுத்த 10 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடனமாட மறுத்த 10 வயது சிறுமி
பீகார், வைஷாலி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை உள்ளூர் திருமண விழாவில் 6ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டுள்ளார். அப்போது, அச்சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் அவர்களுடன் நடனமாடிச் சொல்லி 2 வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அச்சிறுமி மறுத்துவிட்டாள்.
பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரர்கள்
இதனையடுத்து, மறுநாள் வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியேறி வயல்வெளிக்கு வந்துள்ளார் அச்சிறுமி. அப்போது, அங்கு வந்த அந்த இரண்டு இளைஞர்கள் அச்சிறுமியின் வாயை மூடி யாரும் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்றனர். அப்போது, பயந்த அச்சிறுமி அலறி கத்தினார். அப்போது, அவர்கள் அச்சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதைப் பார்த்த அந்த 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தீயில் எரிந்துக் கொண்டிருந்த சிறுமியை மீட்ட பொதுமக்கள் ஹாஜிபூர் சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைவாகியுள்ள பிரசாந்த் குமார் (18), பிரதீக் குமார் (20) ஆகிய 2 குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.