செல்போனை பறிக்க முயன்ற திருடன் - ஓடும் ரயில் ஜன்னலில் தொங்கவிட்ட மக்கள் - வைரலாகும் வீடியோ

Viral Video Bihar
By Nandhini Sep 16, 2022 02:47 AM GMT
Report

ரயில் பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை மக்கள் பிடித்து 15 கி.மீ. தூரம் வரை ஜன்னலில் தொங்கவிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருடனை ஜன்னல் வழியே தொங்கவிட்ட மக்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பீகார், பெகுசராய்யில் உள்ள சாஹேபூர் கமால் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சமஸ்திபூர்-கதிஹார் பகுதியில் ஓடும் ரயிலில் பயணியிடம் செல்போனை பறிக்க முயன்ற திருடனை மக்கள் பிடித்து, சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை ரயில் ஜன்னலில் அப்படியே தொங்க விட்டனர்.

அந்த வீடியோவில் மக்களிடம் திருடன், தயவு செய்து என் கைகளை மட்டும் விட்டுவிடாதீங்க.. என்று கெஞ்சி கேட்கிறான்.

இதன் பின்னர், அந்த திருடனை மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களுக்கான பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

bihar-thief-train-viral-video