பீகாரில் ஆசிரியர் பணியில் அமர்த்தக்கோரி போராட்டம் - ஓட ஓட விரட்டி அடித்த போலீசார்...!

Viral Video Bihar
By Nandhini Dec 13, 2022 11:56 AM GMT
Report

பீகாரில் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் ஆசிரியர் பணியில் அமர்த்தக்கோரி போராட்டம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பீகார், பாட்னாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் மத்திய ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (CTET) ஆகியவற்றுக்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், பாட்னாவில் தங்களை பணியில் அமர்த்தக் கோரி மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் லத்தியால் தடியடி நடத்தி ஓட, ஓட விரட்டி அடித்தனர்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

bihar-teachers-eligibility-test-protest-against