பீகாரில் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தக்கோரி போராட்டம் - ஓட ஓட விரட்டி அடித்த போலீசார்...!
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீகார், பாட்னாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் மத்திய ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (CTET) ஆகியவற்றுக்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், பாட்னாவில் தங்களை பணியில் அமர்த்தக் கோரி மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் லத்தியால் தடியடி நடத்தி ஓட, ஓட விரட்டி அடித்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

This is the Administrative Power of Nitish Kumar & Tejashwi Yadav. How wonderfully they are fulfilling promise of 10 Lakh Jobs?
— The Analyzer (@Indian_Analyzer) December 13, 2022
Bihar Police distributing "JOBS" to the youths in Patna?pic.twitter.com/wG7qlyxX3u