தெறித்து ஓடும் மாப்பிள்ளைகள்..! பெருகும் "பகத்வா விவாஹா"!! காரணம் தெரியுமா..?
அரசு வேலை பெற்ற இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமண செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலை
பீகார் மாநிலத்தை சேர்ந்த 24 வயதானவர் கௌதம் குமார் என்பவர். சமீபத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று பீகாரின் படேபூரில் உள்ள உத்க்ரமித் மத்திய வித்யாலயாவில் ஆசிரியவராக பாணி நியமனம் பெற்றுள்ளார்.
வேலை கிடைத்து 24 மணி நேரத்திற்குள், துப்பாக்கி முனையில் மூன்று அல்லது நான்கு பேர் அவரது பள்ளிக்கு வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். கடத்தியவர்களின் ஒருவரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி மிரட்டி அவருக்கு கட்டாய திருமணமும் நடந்துள்ளது.
பகத்வா விவாஹா
இந்த வகையான திருமணங்கள் பீகாரில் சமீபக்காலமாக அதிகரித்து வருகின்றது. "பகத்வா விவாஹா" அல்லது மணமகன் கடத்தல் என கூறப்படும் இது போன்ற திருமணங்கள், அரசு வேலை கிடைக்கும் ஆண்களை மிரட்டி கட்டாயமான திருமண பந்தத்திற்குள் கொண்டு செல்வதாகும்.
இந்த சம்பவம் தொடர்பாக குமாரின் குடும்பத்தினர் ராஜேஷ் ராய் என்ற நபர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். ராயின் குடும்பத்தினர் குமாரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ராயின் மகள் சாந்தினிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தல்காரர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதனை பலரும் கண்டித்து வருகின்றனர்.