ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள் - யார் அவர்?

Festival Bihar
By Sumathi Aug 11, 2025 12:46 PM GMT
Report

15 ஆயிரம் ராக்கிகளை மாணவிகள் ஆசிரியர் ஒருவருக்கு கட்டி நெகிழ வைத்துள்ளனர்.

ராக்கி தினம்

பீகாரை சேர்ந்தவர் பிரபல ஆசிரியர் கான். இவர் தனியார் கல்வி நிறுவனம் அமைத்து போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார்.

khan

குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைக்கிறார். இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர்.

இந்நிலையில் வடமாநிலத்தில் மூத்த சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தாய் சொன்ன ஒற்றை வார்த்தை - 10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்த சம்பவம்!

தாய் சொன்ன ஒற்றை வார்த்தை - 10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்த சம்பவம்!

வைரல் வீடியோ

அதனை முன்னிட்டு கான் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவிகள், சகோதரிகள் மத வேறுபாடின்றி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள் - யார் அவர்? | Bihar Students Tie 15000 Rakhis On Teachers

தொடர்ந்து இதுகுறித்து பேசியுள்ள கான், தனது மணிக்கட்டில் 15,000-க்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் எடை காரணமான கையை கூட உயர்த்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.