கொரோனா 2ஆம் அலையால் பீகாரில் 75 ஆயிரம் பேர் பலி - அதிர்ச்சி தகவல்
பீகாரில் கொரோனா இரண்டாம் அலையால் 10 மடங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பரவல் மெல்லக் குறைந்து வரும் நிலையில், முதல் அலையுடன் ஒப்பிடுகையில் அதிகளவு உயிர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையில் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட மரணங்களைவிட உண்மையான கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் இம்மாத தொடக்கத்தில் விடுபட்டதாக 3,951 கொரோனா உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது கூடுதலாக ஏற்பட்ட மரணங்களை ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே உள்ளது. அதாவது இந்தாண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 2.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பார்த்தால் பதிவு செய்யப்பட்ட மரணங்களைக் காட்டிலும் கூடுதலாக 10 மடங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.