அவர்கள் எங்கே....? - கிளியிடம் விசாரணை நடத்திய போலீசார் - வைரலாகும் வீடியோ...!

Viral Video Bihar
By Nandhini Jan 28, 2023 06:40 AM GMT
Report

பீகாரில் சாராயம் காசிய கும்பல் தப்பியோடியதையடுத்து, கிளியிடம் போலீசார் விசாரணை நடத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிளியிடம் விசாரணை நடத்திய போலீசார்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் வீட்டில் கும்பல் ஒன்று சாராயம் காய்ச்சியுள்ளது. இத்தகவலை அறிந்த போலீசார் அந்த வீட்டை நோக்கி வந்தனர். போலீசார் வருவதைப் பார்த்த அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அவர்கள் தப்பியோடியதால் வீட்டில் இருந்த கிளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கிளியிடம் போலீசார் உரிமையாளர் எங்கே? எங்கு பதுங்கியுள்ளார் என காவலர் ஒருவர் கேட்டார். அதற்கு அந்த கிளி, ‘கடோரா கடடோரா’ (உணவு வைக்கும் கிண்ணம்) என்று கூறியது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிரித்து, கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

bihar-police-asked-the-parrot-address-owner