ரயிலில் பயணியை தன் காலால் கொடூரமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்... - அதிர்ச்சி வீடியோ...!
பீகாரில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவரை கடுமையாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்
பீகார், முசாபர்பூரில் பயணி ஒருவரை தாக்கியதற்காக 2 ரயில் டிக்கெட் சேகரிப்பாளர்களை ரயில்வே இடைநீக்கம் செய்துள்ளது.
மும்பையிலிருந்து ஜெய்நகர் செல்லும் ரயிலில் தோலி ரயில் நிலையம் அருகே, டிக்கெட் எடுக்காமல் பயணித்ததால், டிக்கெட் பரிசோதகர் ஒருவருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
டிக்கெட் பரிசோதகர் பயணியின் காலைப் பிடித்து மேல் பெர்த்திலிருந்து கீழே இறக்க முயன்றபோது, பயணி எதிர்க்க முயன்றார். அதிகாரியை உதைத்தார்.
இதனால், டிக்கெட் சேகரிப்பாளருடன், ஒரு சக ஊழியரும் சேர்ந்து, அவர்கள் அந்த நபரை தரையில் கீழே இழுத்து அவரை மோசமாக அடித்து உதைத்தனர். தங்கள் காலணிகளால் முகத்தில் உதைத்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து பயணியை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வீடியோ வைரலானதையடுத்து, 2 டிக்கெட் சேகரிப்பாளர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
