தாயையும், 7 வயது குழந்தையையும் உயிரோடு எரித்து கொலை செய்த காமக் கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்..!

Attempted Murder Viral Video Bihar
By Nandhini 2 மாதங்கள் முன்

பீகாரில் ஒரு பெண்ணையும், 7 வயது குழந்தையையும் உயிரோடு எரித்து கொலை செய்த காமக் கொடூரனால் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரோடு எரித்து கொலை செய்த காமக் கொடூரன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பீகார் மாநிலம், அர்வாலில் தாயையும், அவரது 7 வயது மகளும் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட நந்த்குமார் மஹ்தோ என்பவர் அந்தப் பெண்ணின் மீது ஒரு கண் வைத்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக பலமுறை அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை இரவு, மது போதையில், அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து, அந்தப் பெண்ணையும், அவரது 7 வயது மகளும் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளான். தற்போது நந்த்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

bihar-mother-7-year-old-child-murder