‘எனக்கே ராக்கி கயிறா?’ - பாம்புகளுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாட முயன்றவர் பலி

RakshaBandhan 2021 Raksha Bandhan celebration Raksha Bandhan with snakes
By Petchi Avudaiappan Aug 25, 2021 07:40 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சமூகம்
Report

 பீகாரில் பாம்புகளுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாட முயன்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தைச் சேர்ந்த மன்மோகன் எனும் இளைஞர் தன்னார்வலராக கட்டணம் இல்லாமல் பாம்பு பிடிப்பது, அடிபட்ட பாம்புகளுக்கு சிகிச்சையில் உதவுவது, பாம்பு கடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பாம்பு விஷத்தை எடுத்து தருவது போன்ற பணிகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்து பரிசுகளை பெறுவார்கள்.

அந்த வகையில் பாம்புகளே தனக்கு சகோதர்கள் என்று எடுத்துரைக்க தன்னார்வலரான மன்மோகன் தனது வீட்டின் முன் இரு பாம்புகளுக்கு தனது சகோதரியை ராக்கி கயிறு கட்ட வைக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மன்மோகன் கையில் இருந்த ஒரு பாம்பு சுற்றி வளைத்து மன்மோகனின் காலில் எதிர்பாராத வகையில் கடித்தது. இதில் விஷம் உடலில் புகுந்து சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.