காதலனுடன் ஓடிய மனைவி - பதிலுக்கு காதலனின் மனைவியை திருமணம் செய்த கணவன்

Marriage Relationship Bihar
By Sumathi Feb 28, 2023 07:13 AM GMT
Report

தனது மனைவியுடன் ஓடிப்போன காதலனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

பீகார், ஹர்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் நீரஜ். இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரூபிக்கு திருமணத்திற்கு முன்னர் பஸ்ராஹா என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

காதலனுடன் ஓடிய மனைவி - பதிலுக்கு காதலனின் மனைவியை திருமணம் செய்த கணவன் | Bihar Man Marries Woman Husband With Formers Wife

அப்போது அவருக்கும் முகேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து வந்துள்ளனர். முகேஷ்-க்கும் திருமணமாகி அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

பழிக்குப் பழி

இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளனர். முகேஷ் 3 குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து காவல்துறையிடன் புகாரளித்தார் ரூபியின் கணவர்.

மேலும், கிராமத்தில் பஞ்சாயத்துகளும் நடத்தப்பட்டன. இருப்பினும் இருவரும் சேர்ந்தே வாழ்ந்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நீரஜ் முகேஷின் மனைவியுடன் பேசி பழகி தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு திருமணமும் செய்துள்ளார்.

இவர்களுடன் 3 குழந்தைகள் உள்ளனர். னது மனைவியை பிரிந்து சென்ற முகேஷின் மனைவியையே நீரஜ் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.