4 மகள்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை - டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்!
டெல்லியில் 4 மாற்றுத்திறனாளி மகள்களுடன் தந்தை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி
டெல்லி ரங்க்புரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வசித்து வரும் நிலையில் ஒருகுறிப்பிட வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் அங்கு வந்த காவல்துறை, சந்தேகத்துக்கு உரிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு ஆண் மற்றும் நான்கு சிறுமிகள் சடலமாகக் கிடந்தன.தொடர்ந்து அவர்களது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட தகவலில் பீகாரைச் சேர்ந்த50 வயதான ஹிராலால் என அடையாளம் காணப்பட்டார்.
தற்கொலை
இவருக்கு 18 வயது நீது, 15 வயது நிஷி, 10 வயது நீரு மற்றும் 8 வயது நித்தி என்ற நான்கு சிறுமிகளும் ஊனமுற்றதால் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்த நிலையில் அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து வசந்த் குஞ்சில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் வந்த ஹிராலால் தனது 4 மகள்களையும் கவனித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் குடும்பத்தின் சூழ்நிலைகள், மகள்களின் குறைபாடுகள் உள்ளிட்டவை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.