பள்ளி ஆண் ஆசிரியர் கர்ப்பமா? - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகப்பேறு விடுப்பு
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடல்நலனை கருத்தில் கொண்டு பணிபுரியும் இடங்களில் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.
தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்குகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ஆண் அரசு ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் ஆசிரியர்
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஹாஜிபூரில் ஹசன்பூர் ஒசாதி உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பி.பி.எஸ்.சி தேர்ச்சி பெற்ற ஜிதேந்திர குமார் சிங் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பீகார் கல்வித்துறை இணையதளத்தில் ஆசிரியரின் வருகை தொடர்பான தரவுகளில் கடந்த டிசம்பர் 2 முதல் டிசம்பர் 10 வரை ஜிதேந்திர குமார் சிங்கிற்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதிவேற்ற பட்டுள்ளது.
விசாரணை
இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆண் ஆசிரியருக்கு எப்படி மகப்பேறு விடுப்பு வழங்க முடியும், அவர் கர்ப்பமாக உள்ளாரா என பலரும் பீகார் கல்வித்துறையை விமர்சித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து துறைக்கு தகவல் கிடைத்ததும், பள்ளிக்கல்வி துறை இது குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து பேசிய பள்ளி கல்வி அலுவலர் அர்ச்சனா குமாரி, தொழில்நுட்ப கோளாறால் தவறு நடந்து விட்டதாகவும், விரைவில் இது சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.