ஒரு கிலோ காய்கறி ரூ.85000..அப்படி என்ன காய்கறி அது?
உலக சந்தையில் ஹாப் ஹூட்ஸ் என்ற காய்கறி நினைத்து பார்க்க முடியாத அளவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய விவசாயிகளுக்கு விவசாயம் என்பது மிக முக்கிய ஒன்றாகும். அதற்காக தற்போது வரையில் விவசாயிகள் எவ்வாறு போராடி வருகின்றனர் என்பதும் நாம் அறிந்த ஒன்றே.
இதனால் அவர்கள் அதிகமாக வருமானம் ஈட்ட முடிகிறது. பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி இந்த விஷயத்தில் விவரமாக சில விஷயங்களை செய்துள்ளார். இப்போது அவர் தனது தோட்டத்தில் மிக முக்கியமான காய்கறிகளை வளர்த்து வருகிறார். பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கராம்டிஹ் கிராமத்தை சேர்ந்தவர் அம்ரேஷ் சிங்.
இவருக்கு 38 வயதாகிறது. இவர் மாபெரும் முயற்சிகளை மேற்க்கொண்டு 2.5 லட்சம் ரூபாய் செலவில் ஹாப் ஹூட்ஸ் என்னும் தாவரத்தை வளர்த்து வருகிறார். சர்வதேச காய்கறி சந்தையில் மிகவும் விலை உயர்ந்த காய்கறிகளில் ஹாப் ஹூட்ஸ் முக்கியமான காய்கறியாகும்.

இது சர்வதேச காய்கறி சந்தையில் 1 கிலோ சுமார் 85,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அம்ரேஷ் தனது நிலம் முழுவதும் இந்த காய்கறியை வளர்த்து வருகிறார். மேலும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் பயிரில் வருமானத்தை அதிகரிக்கவும் இராசயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை பயன்படுத்தாமலே இவற்றை அவர் வளர்க்கிறார்.
தனது நிலத்தில் சோதனை செய்து காய்கறிகளை வளர்த்து வரும் அம்ரேஷ் இதுப்பற்றி கூறும்போது “காய்கறி சாகுப்படியில் குறைந்தப்பட்சம் 60 சதவீதம் சாகுபடி நடந்துள்ளது” என கூறியுள்ளார்.
இந்த தாவரத்தின் பூக்கள் பீர் தயாரிப்பில் முக்கிய பொருளாக உள்ளது. கிளைகள் மற்றும் தாவரத்தின் மற்ற பகுதிகள் உணவு மற்றும் மருந்துக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.