பீகாரில் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

பீகார் மாநிலத்தில் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக வருகிற மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஸ் குமார் அறிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.09 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்