துப்பாக்கியோடு வங்கியில் கொள்ளையடிக்க வந்த திருடனை மடக்கிப்பிடித்த ஊழியர்கள் - வைரலாகும் சிசிடிவி வீடியோ...!
பீகாரில் துப்பாக்கியோடு வங்கியில் கொள்ளையடிக்க வந்த திருடனை ஊழியர்கள் தைரியத்தோடு மடக்கிப்பிடித்த சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
திருடனை மடக்கிப்பிடித்த ஊழியர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீகார், சமஸ்திபூரில் துப்பாக்கியுடன் வங்கியில் கொள்ளையடிக்க வந்த திருடனை ஊழியர்களின் தைரியத்தோடு போராடி வங்கி கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளனர். பணத்தை கொள்ளையடிக்க வந்த குற்றவாளியை வங்கி ஊழியர்கள் அனைவரும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
