இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான்காவது வாரம் முடிய இருக்கும் நிலையில், இந்த வாரம் மக்களின் குறைந்த வாக்குகள் பெற்று சின்னப்பொண்ணு நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்கள். முதல் வாரம் எலிமினேஷன் இல்லாமல் இருந்தாலும் சில தனிப்பட்ட காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறினார் திருநங்கை நமீதா மாரிமுத்து.
அதன் பின் இரண்டாவது வார நாமினேஷன் நடத்தப்பட்டது. அதில் மக்களிடம் குறைவான வாக்குகளுடன் நாதியா சங் வீட்டை விட்டு வெளியேறினார். பின் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் நடத்தப்பட்டது. அதில் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அதில் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று அபிஷேக் ராஜா வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பின் நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் நடத்தப்பட்டுள்ளது. அதில் பிரியங்கா, இசைவாணி, இமான், சின்னப்பொண்ணு, வருண், அபிநய், ஐக்கி, சுருதி, பாவநி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நாமினேஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள நாணயம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் அதை பயன்படுத்தப்போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து சின்னப் பொண்ணு மக்களின் குறைவான வாக்குகளுடன் இருப்பதாக தெரிகிறது.
அவர் இந்த நிகழ்ச்சியில் கன்டென்ட் எதுவும் கொடுப்பதாக இல்லாத காரணத்தினாலும், அவர் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார். அதனால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.