நடிகை வனிதாவின் புதிய தோற்றம் - அலறப் போகும் பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் களமிறங்கி உள்ளார்.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி முடிவடைவதற்குள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன.
இதையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாவதை உறுதி செய்யும் விதமாக ப்ரோமோக்களும் வெளியாகின.
இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதில் முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன், ஜூலி ஆகியோர் கலந்து கொள்வது உறுதியான நிலையில் 3வது போட்டியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் வெளியேறப் போகிறவர் வனிதா...வனிதா என கமல் கூறுவதை ரீவைண்டு செய்து பார்த்து வருகிறார். திரும்ப திரும்ப பார்த்தது போதும் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு திரும்ப வாங்க என பிக் பாஸ் அழைக்க.. டெரரான வனிதா திரும்ப வந்துட்டேனு சொல்லு சம்பவம் இனிமே தான் ஆரம்பம் என்று மிரட்டலாக பேசியுள்ளார்.
இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.