பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா? - ரசிகர்கள் அதிர்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய், சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேறுவது வழக்கம். அதன்படி ராஜு, பிரியங்கா, பாவணி, தாமரை, நிரூப், சிபி ஆகியோர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இதில் ரூ.12 பணப்பெட்டியுடன் சிபி சில தினங்களுக்கு முன் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் போட்டியிலிருந்து தாமரைச் செல்வி வெளியேற்றப்பட்டுள்ளார். . புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புற பகுதியை சேர்ந்த தாமரை ஒரு நாட்டுப்புற கலைஞராவார்.
இவரின் வெள்ளந்தி குணத்திற்காகவே இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் எகிறியது. இதனால் அவர் நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி 90 நாட்களை கடந்து சக போட்டியாளர்களுக்கு ட்ஃப் கொடுத்து வந்தார்.
எப்படியும் இறுதிச்சுற்றில் பங்கேற்போம் என்ற நம்பிக்கையில் இருந்த தாமரைக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த வாரத்தில் 12 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற சிபி வழங்கிய சந்தர்ப்பத்தையும் தாமரை மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.