செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல்

1 மாதம் முன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான்.

நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார். இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தாமரைச் செல்வி, குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

106 நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு, திரும்பவும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாமரைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பாலா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டைட்டில் வின்னரானார். தாமரை 3ம் இடத்தை பிடித்தார்.

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி 2வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சிக்கு ரம்யாகிருஷ்ணன் நடுவராக உள்ள நிலையில், ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

தற்போது பிக்பாஸ் தாமரை எமோஷனலாக பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு என்னுடன் மிகவும் நெருக்கமாகவும், குடும்ப உறவாக ஐக்கிதான் பழகி வருகிறார். எனக்கு சென்னையில் எங்கு போகணும், என்ன வாங்கணும்கூட எனக்கு தெரியாது. எனக்கு உதவியாக இருப்பது ஐக்கிதான். செலவுக்கு கூட என்னிடம் காசு இல்லை. அப்போது எல்லா செலவையும் செய்தது ஐக்கிதான் என்று கண்கலங்கி பேசுகிறார். அதைப் பார்த்த ரம்யா கிருஷ்ணன் கண்கலங்குகிறார். பிறகு தான் பெற்ற பரிசை ஐக்கியிடம் கொடுத்து அவரை கட்டியணைத்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார் தாமரை. 

இதோ அந்த வீடியோ - இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.