ஆரம்பிக்கலாமா? - மிரட்டும் சிரிப்புடன் கமல் .. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 அப்டேட் வெளியானது !
பிரபல தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கடந்த நான்கு சீசன்களாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
அரசியல் சினிமா என பிசியாக இருந்தாலும் பிக பாஸ் நிகழ்ச்சியினை சிறப்பாக தொகுத்து வழங்கினார் கமல்ஹாசன். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் 5வது சீசனையும் கமல் ஹாசன் தான், தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ,தற்போது பிக் பாஸ் சீசன் 5வின், புத்தம் புதிய லோகோ ப்ரோமோவை அதிகாரப்பூர்வமாக (விஜய் டிவி) வெளியிட்டுள்ளது.
[
அந்த ப்ரோமோவில் கமல் ஹாசன் தனது ஸ்டைலில் ' ஆரம்பிக்கலாமா? என கேட்டு, சீசன் 5வின் லோகோவை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
மீண்டும் பிக் பாஸ் தொடங்க உள்ளதால் பிக் பாஸ் ரசிகர்கள் ஆரவத்துடன் காத்திருக்கின்றனர்.