புஷ்பா பிரபலம் பிக்பாஸ்-லயா? பரவும் தகவல்..ரசிகர்கள் ஆர்வம்!
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பிரபல பாடகி ராஜலக்ஷ்மி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் போட்டியாளர்களாக்க பங்கேற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
பிரபல பாடகி பங்கேற்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதற்கு பின் திரைத்துறையில் பல பாடல்களை பாடி புகழ்பெற்றார்.
அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலை பாடி அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தார். பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்கும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.