படுக்கையறையில் இருந்து வெளியான கமலின் புது வீடியோ - இணையத்தில் வைரல்

biggbossseason5 actorkamalhassan பிக்பாஸ் BBTamilSeason5
By Petchi Avudaiappan Sep 18, 2021 12:19 AM GMT
Report

 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனை வழக்கம்போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இதன் 2 ப்ரோமோக்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் படுக்கையறையில் படுத்துக் கொண்டு பிக்பாஸ் வீடு குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்க அவரது காதுகளுக்கு கிசுகிசு பேசும் சத்தம் கேட்கிறது.

யாருப்பா அது என கமல் கேட்க அது பக்கத்து வீட்டில் இருந்து வரும் சத்தம் என்பதை உணர்ந்து கொண்ட கமல் யாருக்கும் தெரியாமல் கிசுகிசு பேசுகிறோம் என நினைத்து ஊருக்கே தெரியும்படி பேசுகின்றனர் என பிக்பாஸ் நிகழ்ச்சி பக்கம் சென்று விடுகிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.