எனக்கு கமெண்ட் செய்வதை விடுத்து வேறு வேலை இருந்தால் பாருங்கள் - "பிக்பாஸ்" ரைசா பதிலடி
எனது புகைப்படத்திற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள் என்று நடிகை ரைசா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரைசா. ‘வேலை இல்லாத பட்டதாரி’, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது முகம் சரியான நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் கவர்ச்சிகரமான இருப்பதாக கூறி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த ரைசா தனது இன்ஸ்டாகராம் பக்கத்தில் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் அதே சிந்தனையோடு எடுத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற கமெண்ட்களை படிப்பதில்லை. நடிகை ஒருவர் பிகினி அணிவது சாதாரண விஷயம். இதற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள் என கூறியுள்ளார்.