சமந்தாவுக்கு போட்டியாக களம் கண்ட பிக்பாஸ் ஜூலி - வெளியான வைரல் வீடியோ
புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ‘ ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு ஜூலி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஜூலி மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். சமீபத்தில் நடிகை ஜூலி கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். \
இதனிடையே இன்ஸ்டகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜூலி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ‘ ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது குறித்து ரசிகர்கள் சமந்தாவுக்கு போட்டியாக ஜூலி களமிறங்கியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.