காதலன் மீது பிக்பாஸ் ஜூலி பரபரப்பு புகார்

biggboss julie
By Fathima Dec 04, 2021 05:54 AM GMT
Report

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னிடம் பண மோசடி செய்ததாக பிக்பாஸ் ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலமானவர் மரியா ஜூலியானா, தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரது வெறுப்பையும் சம்பாதித்தார்.

எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த மரியா ஜூலியானா, நேற்று அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்த மனிஷ்(26) அண்ணா நகர் 2ஆவது அவென்யூவில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருவதாகவும், கடந்த 2017ஆம் ஆண்டு மனிஷ் மீது காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த மனிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்த நிலையில், மனிஷுக்கு தான் இருசக்கர வாகனம்,16 கிராமில் தங்க செயின், பிரிட்ஜ் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்து 2.30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென மனிஷ் கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி மதத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாக தெரிவித்து காதலை முறித்து கொண்டதாக தெரிவித்துள்ள ஜூலி,

மனிஷ் தொடர்ந்து தன்னிடம் மேலும் பணத்தை பறிக்கும் வகையில் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.