'ஐயோ எனக்கு தமிழ் படிக்கத் தெரியாதே' - ஜோவிகாவை கலாய்த்த BiggBoss?
ஜோவிகா விஜயகுமார்
பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் சீசன் 7னில் பங்கேற்றுள்ளார். அதில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன் என அவர் பேசியது பெரும் விவாதப்பொருளானது.
மேலும், தனது படிப்பு சம்மந்தமான எந்த விஷயத்தையும் மற்ற கண்டெஸ்டெண்ட்ஸ் யாரும் பேசவேண்டாம் என்று அவர் உத்தரவிட்டார். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் பெரும் சண்டை வெடித்தது.
அண்மையில் வீட்டிற்குள் பிக்பாஸ் டாஸ்க் லெட்டர் ஒன்றை வைத்து 'உங்களில் யாராவது ஒரு ஆள் கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்று பாருங்கள் என்று கூறினார். அப்போது ஜோவிகா முந்திக்கொண்டு முதல் ஆளாக கன்ஃபெஷன் ரூமுக்குள் நுழைந்தார்.
நெட்டிசன்கள் தாக்கு
பின்னர் டாஸ்க் லெட்டரை எடுத்து பார்த்தவுடனே "ஐயோ எனக்கு தமிழ் படிக்கத் தெரியாதே" என்று கூறிவிட்டு படிக்கத் தொடங்கினார். பின்னர் எழுத்து கூட்டி படித்துப் பார்த்து விட்டு மீண்டும் "எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது பிக்பாஸ், அவசரப்பட்டு வந்துட்டேன்" என்று கூறினார்.
சிறிது நேரம் கழித்து பிரதீப்பை அழைத்த பிக்பாஸ் "உள்ளே போய் ஜோவிகாவை வெளியே கூட்டிட்டு வாங்க" என்று கூறினார். பின்னர் ஜோவிகாவை அவர் வெளியே அழைத்து வந்தார்.
இது குறித்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், பிரதீப்பை வைத்து ஜோவிகாவை பிக்பாஸ் கலாய்த்து விட்டார், தாய் மொழியே தெரியவில்லை, கல்வி முக்கியம் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.