ஆரம்பத்திலேயே விஜய்க்கும் எனக்கும் அந்த பிரச்சனை; அப்படியே நிப்பாரு - பிக்பாஸ் ஜனனி ஓபன் டாக்!
பிக்பாஸ் பிரபலம் ஜனனி லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
லியோ திரைப்படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. படம் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால் வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றி விழாவும் அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசிய சில விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் இலங்கையை சேர்ந்த பிக்பாஸ் பிரபலம் ஜனனியும் நடித்திருந்தார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனனி லியோ படம் மற்றும் நடிகர் விஜய்யுடன் நடித்தது குறித்த அனுபவங்களை பேசியுள்ளார்.
நடிகை ஜனனி
ஜனனி பேசியதாவது "விஜய் சாருடன் தான் எனக்கு சீன் இருக்கிறது என்பதை கேட்ட பிறகு முதலில் பயமாகத்தான் இருந்தது. பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது. ஆரம்பத்தில் என்னுடைய மொழி அவருக்கு புரியவே கஷ்டமாக இருந்தது.
ஸ்கிரிப்டை பார்த்து நான் என்னுடைய மொழியில் பேசிவிடுவேன். அப்போது விஜய் சார் அப்படியே நின்று "என்னம்மா சொன்னீங்க " என்று கேட்பார். பின்னர் நான் இதைத்தான் சொன்னேன் என்று சொன்னால் அவர் சரி,சரி என்று சொல்வார்.
இதனால் ஆரம்பத்திலேயே எனக்கும், விஜய் சாருக்கும் மொழியில் பிரச்சனையானது. அதன் பிறகு ஸ்கிரிப்டை நான் மனப்பாடம் செய்தேன். சில வார்த்தைகளை கற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு விஜய் சாருக்கு புரிந்தது. பின்னர் ஒரே டேக்கில் விஜய் நடிப்பார். அதை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்" என்று ஜனனி பேசியுள்ளார்.