இந்துக்களே உஷார்- உதயநிதி ஸ்டாலின் குறித்து பிரபல பிக்பாஸ் நடிகை டுவீட்
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கையில் வேல் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்துக்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கையில் வேல் வைத்துக்கொண்டு கொடுத்த போஸ் ஒன்றினை சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்த புகைப்படம் குறித்து, பாஜக நிர்வாகியும், நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று ஸ்டாலின் வேல் ஏந்தி இந்துக்களை ஏமாற்றினார். இன்று அவரது மகன் உதயநிதி வேலை ஏந்தி நாடகமாடுகிறார்.

வினாயகர் சதுர்த்திக்கு தனது மகள் கேட்டுகொண்டதால் வினாயகர் படத்தை டிவிட்டரில் போட்டதாக அன்று சொன்ன உதயநிதி இன்று தேர்தலுக்காக இந்து ஓட்டுக்களை பெற தந்தையுடன் சேர்ந்து நாடகமாடுகிறார் இந்துக்களே உஷார் இவர்கள் எத்தனை வேடம் போட்டாலும் வரும் தேர்தலில் இந்த இந்து விரோதிகளை விரட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.