பிக்பாஸ் ஆரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: அவரே வெளியிட்ட வீடியோ

hospital video twitter
By Jon Jan 22, 2021 03:12 PM GMT
Report

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றியாளராக மகுடம் சூடினார் நடிகர் ஆரி. சீசன் தொடக்கம் முதலே மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தாலும், சக போட்டியாளர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்தவர் ஆரி. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் குறைகளை சரியான நேரத்தில் எடுத்துக் காட்டியதே.

வெற்றி பெற்றதுடன் கோப்பையுடன் புகைப்படத்தை பதிவிட்ட ஆரி, 'எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே' எனறு முதல் பதிவில் கூறினார். இந்நிலையில் நேற்று நடிகர் ஆரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், 'இந்தக் காணொலி எதற்காக என்றால் உங்கள் அனைவரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் காத்திருந்தேன்.

எனக்கு உடல்நிலை சரியில்லை. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் முதலே எனது உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. விரைவில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி. நேர்மைக்கும் உண்மைக்கும் நீங்கள் கொடுத்த வெற்றி. இதற்காக நான் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

விரைவில் உங்களை எல்லாம் சோஷியல் மீடியா வாயிலாக சந்திக்கிறேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக தேர்வு செய்து அன்புடன் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.