அந்த ஒரு கெட்ட பழக்கத்தினால்தான் வாழ்க்கையே போச்சு - பிக்பாஸ் தாமரை வேதனை!

Tamil Cinema Bigg Boss Tamil Actress Actress
By Jiyath Sep 20, 2023 03:50 PM GMT
Report

பிக்பாஸ் தாமரை தான் வாழ்க்கையில் சிரமப்பட்டது பற்றி பேசியுள்ளார்.

பிக்பாஸ் தாமரை

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' மூலமாக பிரபலம் அடைந்தவர்தான் தாமரை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், தெருக்கூத்து கலைஞராக இருந்துள்ளார்.

அந்த ஒரு கெட்ட பழக்கத்தினால்தான் வாழ்க்கையே போச்சு - பிக்பாஸ் தாமரை வேதனை! | Biggboss Fame Actress Thamarai About Drinks

இவரை நிகழ்ச்சியில் பார்த்த பலரும் 1 வரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என்று நினைத்தார்கள். ஆனால் அதிரடியாக ஆடி 90 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தார். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர், தனது கணவருடன் சேர்ந்து விஜய் டிவியில் 'பிக்பாஸ் ஜோடி' நிகழ்ச்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்திய தாமரை, பின்னர் பாரதி கண்ணம்மா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும், பொம்மி சீரியலிலும் நடித்து வருகிறார். அண்மையில் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் தாமரை. அதில் மதுவால் தான் நான் வாழ்க்கையை இழந்தேன் என்று பேசியுள்ளார்.

பேட்டி

அவர் பேசியதாவது "பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் ஷூட்டில் போய் நின்றபோது, ‘என்ன நடிக்கிறீங்க..? என்று கிண்டல் செய்தபோது தான் தெரிந்தது, பிக்பாஸ் வீட்டில் அத்தனை கேமரா முன் நான் நடித்ததாக கிண்டல் செய்தார்கள், இங்கு ஒரு கேமரா முன் என்னால் நடிக்க முடியவில்லை என்கிறார்கள்.

அந்த ஒரு கெட்ட பழக்கத்தினால்தான் வாழ்க்கையே போச்சு - பிக்பாஸ் தாமரை வேதனை! | Biggboss Fame Actress Thamarai About Drinks

அதன் பிறகு தான், விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லை. யாரோ ஒருவருக்காக யாரோ ஒருவர் மீம்ஸ் போடுவார்கள். அதற்காக நாம் ஏன் வருத்தப்பட வேண்டும். நிறைய மது பழக்கம் அதிகரித்துவிட்டது. என் வாழ்க்கை மதுவால் சிரமப்பட்டிருக்கு. அதனால் தான் விவாகரத்து ஆகிறது. இன்று காதலித்து கல்யாணம் செய்துவிட்டு பிரிகிறார்கள்.

அது எதனால் என்று தெரியவில்லை. மதுவால்தான் நான் வாழ்க்கையை இழந்தேன். இப்போ குட்டி குட்டி பசங்க கூட, மது இல்லாமல் இருப்பதில்லை. பெண்கள் ரொம்ப பாவம். அவர்களின் சிரமம், ஆண்களுக்கு தெரிவதில்லை. மது அருந்திவிட்டு பெண்களை சிரமப்படுத்த கூடாது" என்று தாமரை பேசியுள்ளார்.