இன்றைய பிக்பாஸில் இவர் தான் எலிமினேட் - ரசிகர்கள் அதிர்ச்சி!
மக்களின் மனம் கவர்ந்த முக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வரும் சூழலில் இன்றைய எபிசோடில் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 4வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே நிகழ்ச்சி ஆரம்பித்து 3 வாரங்களே கடந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள், பிரச்சனைகள், குழப்பங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய எபிசோடில் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்தில் நாடியா சங் என்பவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் கன்டென்ட் கிரியேட்டர் என்று அழைக்கப்படும் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இந்த வார நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படும் அபிஷேக் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.