லவ் டார்ச்சர்.. வனிதாகிட்ட பேசுறதில்ல; நிறைய பசங்க ஏமாந்துருக்காங்க - BiggBoss பாலா பகீர்!
பிக்பாஸ் பாலாஜி
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலாஜி. அதில் ரன்னராகவும் தேர்வானார். இதனையடுத்து நடந்த பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட பாலாஜி, டைட்டில் வின்னர் ஆனார்.
பாலாஜி நடிப்பில் 'வா வரலாம் வா' என்ற திரைப்படத்தில் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த பாலாஜி, தனது வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார். அதில் அவரிடம், வனிதாவிடம் நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலாஜி "நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவிடம் பேசுவது கிடையாது.
எல்லாம் பயம் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது என்று சிரித்தபடியே கூறினார். மேலும், தனது வாழக்கையில் நடந்த சோகமான நிகழ்வு குறித்து பேசிய பாலாஜி "நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணும் என்னை காதலித்தது. இருவரும் நன்றாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சில நாட்களாக அந்த பொண் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதனால் ஒரு நாள் அவருடைய வீட்டிற்கு போய் அவருடைய அம்மாவிடம் பேசினேன்.
பேட்டி
எதார்த்தமாக அந்த பக்கமாக வந்தது போல அவரிடம் அந்த காதலித்த பெண்ணின் பெயரைச் சொல்லி அவள் இருக்கிறாளா என்று விசாரித்தேன். அப்போது அவள் வெளியே போயிருக்கா என்று சொன்னார்.
பிறகு நான் அவரிடம் வந்தால் எனக்கு போன் பண்ண சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் அடுத்த நாளே எனக்கு போன் வருகிறது. நீ என் பொண்ணுக்கு லவ் டார்ச்சர் பண்றியான்னு கேட்கிறாங்க. பிறகு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்னு மிரட்டுனாங்க. எனக்கு அது ரொம்ப ஷாக்கா இருந்தது. நாங்க ரெண்டு பேருமே அந்த நேரத்தில் காதலிச்சிட்டு இருந்தோம்.
எதுக்கு அந்த பொண்ணு வீட்டில, நான் மட்டும் அந்த பொண்ணை அவள லவ் டார்ச்சர் பண்றேன்னு சொன்னான்னு தெரியல. இந்த மாதிரி நிறைய பசங்க வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருக்காங்க. இதுபோல பலர் ஏமாற்றமும் படுறாங்க" என்று பாலாஜி எமோஷனலாக பேசியிருக்கிறார்.