BiggBoss வீட்டில் திடீரென கர்ப்பமான போட்டியாளர்..? பெரும் பரபரப்பில் ஹவுஸ் மேட்ஸ்!
பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும்போதே நடிகை அங்கிதா லோகண்டேகர்ப்ப பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
பிக்பாஸ்
இந்திய தொலைக்காட்சிகளில் தற்போது மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக 'பிக்பாஸ்' இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் 'பிக் பிரதர்' என்ற பெயரில் நடந்து வரும் போட்டியைத்தான், இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர்.
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஹிந்தியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
கர்ப்ப பரிசோதனை
இந்த ஆண்டு ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் பல முக்கிய போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் நடிகை அங்கிதா லோகண்டே. இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும்போதே இவர் கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தனது மாதவிடாய் காலம் தவறியதாகவும் இதனால் கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அங்கிதா லோகண்டே, சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட தோனி பட நடிகர் 'சுஷாந்த் சிங்கின்' முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.