பிக்பாஸ் நடிகை நள்ளிரவில் திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் திரையுலகம்

Death Actress
By Karthikraja Jun 28, 2025 06:21 AM GMT
Report

இந்தி நடிகை ஷெஃபாலி ஜரிவாலா நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.

ஷெஃபாலி ஜரிவாலா

42 வயதான நடிகை ஷெஃபாலி ஜரிவாலா, சில ஹிந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

பிக்பாஸ் நடிகை நள்ளிரவில் திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் திரையுலகம் | Biggboss Actress Shefali Jariwala Passed Away

2002 ஆம் ஆண்டு வெளியான இவரது இசை வீடியோ ஆல்பமான ‘Kaanta Laga’ இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தி பிக் பாஸ் 13 சீசனிலும், போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இசைக்கலைஞர் ஹர்மீத் சிங் என்பவரை திருமணம் செய்து, 2009 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில், நடிகர் பராக் தியாகியை திருமணம் செய்து கொண்டார். 

பிக்பாஸ் நடிகை நள்ளிரவில் திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் திரையுலகம் | Biggboss Actress Shefali Jariwala Passed Away

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவரது கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஷெஃபாலி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஷெஃபாலியின் உயிரிழப்பு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.