பிரம்மாண்டமாக தொடங்கியது பிக் பாஸ் 5 - ரசிகர்கள் உற்சாகம்! யார் யார் contestants தெரியுமா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் 5ம் சீசன் தற்போது மிக பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.
முந்தைய சீசன்களை போல இந்த முறையும் பிக் பாஸ் வீட்டை தான் முதலில் கமல் காட்டுகிறார். கடந்த வருடத்தை போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீடு மிக பெரிதாகவே இருக்கிறது.
பெரிய பெட்ரூம், லிவிங் ஏரியா என பெரிதாகவே அது இருக்கிறது. வீட்டுக்கு வெளியில் இந்த முறை சிறை இல்லை, அதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கார்டனில் இருக்கும் நீச்சல் குளத்தை தான் சிறையாக மாற்றி இருக்கிறார்கள். அதன் பின் கமல் பிரம்மாண்ட மேடைக்கு நடந்து வருகிறார். ஆரம்பிச்சாச்சு.. என அவரது பாணியில் மாஸாக பேசி ஷோவை தொடங்கியுள்ளார்.
இதுவரை இசைவானி, கனா காணும் காலங்கள் ராஜு, மாடல் அழகி மதுமிதா, யூடியூப்பர் அபிஷேக், திருநங்கை நமிதா, சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பிரியங்கா பிரமாண்ட வீட்டிற்குள் சென்றுள்ளனர்.